0
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திர கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு – கறுவாத்தோட்டைப் பொலிஸாரால் இன்று பகல் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டம், ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டமை உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்றும் அவர் அரசுக்கு எதிராகப் போராட்டமொன்றில் ஈடுபட்டிருந்தார். அவ்வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.