0
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய தளபதி மாவீரர் கப்டன் பண்டிதரின் பூர்வீக இல்லத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்., வடமராட்சி, வல்வெட்டித்துறை – கம்பர்மலையில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில், மாவீரர் பண்டிதரின் தாயார் சுடரேற்றினார்.
அச்சுவேலிப் பகுதியில் 1985ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி இராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில், விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கப்டன் ப.இரவீந்திரன் (பண்டிதர்) வீரச்சாவு அடைந்தார்.