தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்து லெப். சங்கருக்கு அவரது பூர்வீக இல்லத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்., வடமராட்சி, வல்வெட்டித்துறை – கப்பர்மலையில் உள்ள அவரது வீட்டில் இன்று மாவீரர் பண்டிதரின் தாயார் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.
அதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
சத்தியநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட சங்கர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்த (27.11.1982) தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல் மாவீரர் ஆவார்.
இவர் மரணித்த நாளையே மாவீரர் நாளாக அறிவித்து ஒவ்வோராண்டும் அனைத்து இறந்த போராளிகளும் நினைவுகூரப்படுகின்றார்கள்.