அடுத்த சர்வகட்சிக் கூட்டம் எப்போது இனி இடம்பெறும் என்பது தொடர்பில் இந்த வாரம் கட்சித் தலைவர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரியவருகின்றது.
இதேவேளை, தமிழர் தரப்பு விடயங்கள் தொடர்பாகத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரத்தியேகமாகச் சந்திப்பார் என்றும் அறியமுடிகின்றது.
அவை ஜனாதிபதியின் தனிப்பட்ட சந்திப்பாக இருக்கும் என்றும் தெரியவருகின்றது.
இந்தச் சந்திப்புக்களில் துறைசார் அமைச்சர்கள், பொறுப்பான அதிகாரிகள் கலந்துகொள்வார்கள் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என்றும் அறியமுடிகின்றது.