மாத்தறை கடலில் நீராடச் சென்ற இரண்டு மாணவர்கள் கடல் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என்று மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தறை, அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
புத்தாண்டு தினமான நேற்று மாலை நான்கு பேர் நீராடச் சென்றனர் என்றும், அதில் இருவரே உயிரிழந்துள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து மேலதிக வகுப்புகளில் கலந்துகொள்வதாகக் கூறி சென்றுள்ளனர் என்று பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.