ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு – கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஷ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் இணைய வேண்டும் எனக் கோரி வவுனியா – நெடுங்கேணியில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நெடுங்கேணி நாகதம்பிரான் ஆலயத்துக்கு அருகாமையில் வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, “தமிழ் அரசியல் கட்சிகளிடையே அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைகள் ஒருமித்த முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும்”, “அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்”, “வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீள ஒருங்கிணைக்கப்பட்டு வடக்கு – கிழக்கு தனி மாகாண அலகாக உருவாக்கப்பட வேண்டும்” போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய பதாதைகளை மக்கள் ஏந்தியிருந்தனர்.
போராட்டத்தின் இறுதியில் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஊடகங்களுக்கு வாசித்துக் காட்டப்பட்டது.