December 7, 2023 12:19 am

அமைதியான மனம் பற்றி விவேகானந்தர் சொன்ன கதை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

விவேகானந்தர் இளஞர்களை தன்  சிந்தனைகள் வாயிலாக சமூகத்துக்கு உகந்தவராக மாற்றிய மாமனிதன் அத்தகைய சம்பம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன்.

ஒரு ஊரில் ஒரு இளைஞன் இருந்தான் அவன் மனக் குழப்பம் ,அமைதியற்று இருப்பதை உணர்ந்தான் அப்போது விவேகானந்தரை பற்றி அறிந்து அவரை காண சென்றான்.  அவரிடம்  சென்று ஐயா நான் பலநாட்களாக அமைதியற்று   உள்ளேன் . என்னிடம் தேவைக்கேற்ற பணம் உள்ளது. தேவையான எல்லாமே என்னிடம் உண்டு ஆனால் என்னிடம் மன அமைதி நிம்மதி மற்றும் இல்லது ஒரே குழப்பமாக உள்ளது. நான் என்ன செய்வது என்று தெரியவில்லை ஏதும் வலி சொல்லுங்கள். நான் இவற்றை குறைக்க தியானம் செய்ய நினைத்தாலும் என்னால் முடிவதில்லை என்ன செய்வது என்று தெரியவில்லை.

அப்போது தான் விவேகானந்தர் அந்த இளைஞ்சனுக்கு ஒரு கதையை சொல்ல நினைத்தார் ஒரு வனத்தில் மூன்று துறவிகள் தியானத்தில் இருந்தனர். ஒருநாள் ஒரு துறவி கண்ணை முழித்து கருப்பு குதிரை ஓடுகிறது என்றார். இன்னொரு நாள் மற்றைய துறவி ஓடியது வெள்ளை குதிரையாக தான் இருக்க வேண்டும் என்கிறார். சிறிது காலம் செல்ல மூன்றாம் துறவியும் கண்ணை விழித்து நீங்கள் இவ்வாறு சத்தம் செய்தால் நான் எவ்வாறு தியானம் இருப்பது என்கிறார். இவர்கள் மூவரும் இங்கே வெறும் கண்களை மூடி தியானம் செய்ததுக்கு பதில் மனதை மூடி தியானம் செய்திருக்க வேண்டும் என்றார் .

மேலும் நீ சென்று உன் மன அமைதிக்கு தியானம் செய்யத்தேவையில்லை உன் அயலில் உணவற்று  ,உதவி இல்லத்தவருக்கு உதவி செய் என்றார் , மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு மருந்தை வேண்டி கொடு என்றார். இவ்வாறு செய்வதும் ஒரு தியானம் தான் அப்போது உன் மனம் அடையும் அமைதி மிக பெரியதாகவும் இருக்கும் என்று கூறினார். அமைதி என்பது தியானத்தில் மற்றும் கிடைப்பவை அல்ல .

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்