உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆரம்பித்துள்ளது.
இதற்கமைய களுத்துறை மாவட்டத்தில் களமிறங்குவதற்கான கட்டுப்பணத்தை களுத்துறை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் மொட்டுக் கட்சி செலுத்தியது.
மொட்டுக் கட்சியின் களுத்துறை மாவட்ட தலைவரான முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தலைமையிலே கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ , சாகர காரியவசம், சனத் நிஷாந்த உள்ளிட்ட மொட்டுக் கட்சி முக்கியஸ்தர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.
எதிர்வரும் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை கட்டுப்பணம் செலுத்துவதற்குக் கட்சிகளுக்கும், சுயேட்சைக் குழுக்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.