யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலில் நம்பிக்கை இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
எந்தக் காலப்பகுதிக்குள் கைப்பற்றப்பட்டுள்ள காணிகள் விடுவிக்கப்படும் என ஜனாதிபதியால்
அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கட்டுப்பணத்தைச் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.