யாழ்., தென்மராட்சி, சாவகச்சேரி டச்சு வீதியிலுள்ள கிணற்றுக்குள் இருந்து 62 வயது ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மயில்வாகனம் கஜேந்திரன் (வயது – 62) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனித்து வசித்து வந்த அவரை, கடந்த சனிக்கிழமை இரவு வரை சாவகச்சேரி நகரப் பகுதியில் நடமாடியதை பலர் கண்டுள்ளனர். அதன் பின்னர் எவரும் காணவில்லை.
குளிக்கச் சென்ற வேளையில் தவறி வீழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
நேற்று கிணற்றடிக்குச் சென்ற அயல்வீட்டுக்கார யுவதி ஒருவர், கிணற்றில் மூழ்கிய நிலையில் சடலம் ஒன்று இருப்பதை அவதானித்து சத்தமிடவே அயலவர்கள் பார்வையிட்டு சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்குத் தெரியப்படுத்தினர்.