இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் மற்றும் தவராசா கலையரசன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, சுதந்திர தினத்தையொட்டிக் கரிநாளாக அறிவித்த தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டிருந்த போராட்டம் என்பன தொடர்பில் பேசப்பட்டன.
அத்துடன், எதிர்வரும் காலங்களில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் உதவிகளை எவ்வாறு தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு உதவும் வகையில் வழங்க முடியும் என்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற மேற்படி சந்திப்பில், இலங்கைக்கான பிரான்ஸின் துணைத் தூதுவரும் பங்கேற்றிருந்தார்.