சிறையில் பல வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியான கனகசபை தேவதாஸன் (வயது 66) ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, கடந்த 2008 ஆண்டு கைது செய்யப்பட்டு அரசியல் கைதியாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள கனகசபை தேவதாஸன் கடும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
“எமது கோரிக்கையின் பிரகாரம் குறித்த அரசியல் கைதி இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்” – என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.