வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயப் பெருந் திருவிழாவின் தேர்த் திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் பக்திபூர்வமாக நடைபெறவுள்ளது.
காலை 7 மணியளவில் வசந்தமண்டபப் பூஜை இடம்பெற்று காலை 8.30 மணியளவில் நாகபூசணி அம்மன் சித்திரத் தேரில் ஆரோகணிப்பார். மாலை 4 மணியளவில் பச்சை சாத்தி சித்திரத் தேரிலிருந்து நாகபூசணி அம்மன் அவரோகணம் செய்யும் திருக்காட்சி இடம்பெறும்.
நாளை திங்கட்கிழமை காலை 6.15 மணியளவில் வசந்தமண்டபப் பூஜையும், காலை 7 மணியளவில் நாகபூசணி அம்மன் ஆலயத்திலிருந்து தீர்த்தமாடப் புறப்பட்டு நண்பகல் 12 மணியளவில் கங்காதரணியில் தீர்த்தோற்சவமும், நாளை நள்ளிரவு 12 மணிக்குக் கொடியிறக்க உற்சவமும் நடைபெறும்.