குளம் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மன்னார் – கட்டுக்கரைக் குளத்திலிருந்து குறித்த சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
மேற்படி குளத்தில் படகு ஒன்றில் மீன்பிடிக்கச் சென்றிருந்த இரண்டு மீனவர்கள் நேற்று காணாமல்போயிருந்தனர்.
அவர்களில் ஒருவரே இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட மீனவர் பரப்பாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த 57 வயதானவர் எனத் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், காணாமல்போயுள்ள மற்றைய மீனவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.