கம்பஹாவில் பௌத்த தேரர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா, மல்வத்து – ஹிரிபிட்டிய பகுதியிள்ள விகாரையொன்றில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்திலேயே தேரர் சாவடைந்துள்ளார்.
44 வயதுடைய தேரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த தேரர், கம்பஹா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ரி — 56 ரக துப்பாக்கியால் இந்தச் சூடு நடத்தப்பட்டுள்ளது என்றும், 4 சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பெலியத்தை பிரதேசத்தில் அரசியல்வாதி ஒருவர் உட்பட 5 பேர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், இன்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.