4
2023 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் கணிதப் பாடப் பிரிவில் (பௌதீக விஞ்ஞானம்) யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவன் மதியழகன் டினோஜன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மேற்படி மாணவன் அகில இலங்கை ரீதியில் 47 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பொறியியல் தொழிநுட்பப் பாடப் பிரிவில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் செல்வச்சந்திரன் ஶ்ரீமான் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இவர் அகில இலங்கை ரீதியில் 10 ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.
உயிரியல் விஞ்ஞானப் பாடப் பிரிவில் யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி தாருகா மாவட்ட ரீதியில்
முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
உயிரியல் தொழில்நுட்பப் பாடப் பிரிவில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் ஜெயசீலன் சுமன் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இவர் அகில இலங்கை ரீதியில் 28 ஆம் இடத்தைப் பெற்றுள்ளார்.