கணினி பாகங்களில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருட்கள் இன்று (07) புதன்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த போதைப்பொருட்கள் 63 கணினி பாகங்களிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளன.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் கட்டுநாயக்க பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
துபாயில் தலைமறைவாக உள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “துபாய் நிப்புன”என்பவரின் தலைமையில் இந்த போதைப்பொருட்கள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களை கைது செய்வது தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.