சீன அரசுடன் இணைந்து பணியாற்றும் இரண்டு ஹேக்கர்கள் உலக அளவில் கொரோனா வைரசுக்கான, தடுப்புசி தொடர்பான தகவல்களை திருட முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக வாஷிங்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், குறிப்பிட்ட இரண்டு ஹேக்கர்கள் உலகளாவிய நிறுவனங்களிடமிருந்து நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் வர்த்தக ரகசியங்களை திருடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் அதே நபர்கள் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை தயாரிக்கும் பிரபல நிறுவனங்களில் சைபர் தாக்குதல் நடத்தியதாகவும், ஆனால் தரவுகள் திருடப்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.