உக்ரைனுக்கு கூடுதலாக போர் விமானங்களை அனுப்புமாறு அமெரிக்காவிடம் அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி கேட்டுக்கொண்டுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா 11ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசியில் பேசினார்.
அப்போது, உக்ரைனுக்கு பாதுகாப்பு மற்றும் பொருளாதார உதவிகளை செய்யுமாறும், ரஷ்யா மீது தொடர் பொருளாதார தடைகளை விதிக்குமாறும் ஜோ பைடனிடம் ஜெலென்ஸ்கி கேட்டுக் கொண்டார்.
இந்த வாரத்திலேயே இரண்டாவது முறையாக ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைனுக்கு தேவையான பாதுகாப்பு, மனிதநேய மற்றும் பொருளாதார உதவிகளை செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.
உக்ரைனுக்கு கூடுதலாக போர் விமானங்களை அனுப்புமாறு கேட்டுக் கொண்ட ஜெலென்ஸ்கி, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்துமாறு வலியுறுத்தினார்.