Zoom நிறுவனத்தின் தலைவர் கிரெக் டோம்ப் (Greg Tomb), திடீரென அவரது பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என BBC செய்தி வெளியிட்டுள்ளது.
கிரெக் டோம்ப், 2022ஆம் ஆண்டு Zoom நிறுவனத்தின் தலைவராகப் பதவியேற்றார் என்றும் தற்போது எவ்விதக் காரணங்களும் இன்றி அவரின் வேலை ஒப்பந்தம் திடீரென ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் BBC தெரிவித்துள்ளது.
கொரோனா முடக்க காலத்தின்போது, “வீட்டிலிருந்து வேலை” எனும் நடைமுறை ஏற்பட்டது. இதன்போது, Zoom மிகவும் பிரபலமாகியிருந்தது.
எனினும், தற்போது வீட்டிலிருந்து வேலை நடைமுறை மாறி, எல்லோரும் அலுவலகங்களுக்குத் திரும்பியுள்ளமையால், பயனாளர்களை தக்கவைத்துக்கொள்வதில் Zoom சிரமத்தை எதிர்நோக்கி வருவதாகவும் இதனால் கடந்த மாதம் 1,300 பேரை அந்நிறுவனம் பணி நீக்கம் செய்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.