இந்தியாவின் பல பகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் பகுதி பகுதியாக நடைப்பெற்று வரும் நிலையில் அனைத்து இடங்களும் தேர்தலுக்கான பிரசாரம் தேர்தல் வாக்குச்சாவடிகள் வேட்பாளர்கள் கட்சி குரல்கள் என சூடான நிலை காணப்படுகிரற்றது.
குஜராத்தில் 182 தொகுதிகளில் கடந்த டிசம்பர் 1 ஆம் திகதி முதலாம் கட்ட தேர்தல் 82 தொகுதிகளில் நடை பெற்ற நிலையில் நாளை (டிசம்பர் 5) 93 தொகுதிகளுக்கு நடைபெறவுள்ளது இந்த தேர்தலில் 2.54 கோடி வாக்காளர் தமது வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர்.14,975 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன்.
93 தொகுதிகளிலும் 60 கட்சிகளை பிரதிநிதித்துவபடுத்தி 833 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.
இங்கு பாஜக , காங்கிரஸ் , ஆம் ஆத்மி மும்முனை போட்டி காணப்படுவதுடன் இங்கு பல பிரபலங்கள் கட்சிகளுக்கு சார்பாக பிரசாரங்கள் செய்தமையும் குறிப்பிட்ட தக்கது ஆம் ஆத்மி கட்சிக்கு சார்பாக ஹர்பஜன் சிங்கும் , காங்கிரஸ் சார்பாக முன்னால் கிரிக்கெட் வீரர் அஸாருதீர்ப்பும் பிரசாரம் செய்தனர். மேலும் 27 வருட காலம் இங்கு பாஜக ஆட்சியே நிலைத்துள்ளமையும் குறிப்பிட வேண்டிய விடயமாக உள்ளது.
இந்த தேர்தலுக்காக தனது சொந்த ஊரான குஜராத்துக்கு தன் தாயாரை காண மோடி சென்று அவரிடம் ஆசீர்வாதங்களையும் பெற்றுள்ளார்.
அதைபோல் மறுபக்கம் டெல்லி மாநகராட்சி வாக்குப்பதிவு நடவடிக்கை இன்று நடைப்பெற்றுள்ளதுடன் டிசம்பர் 7 இதற்கான வாக்கு எண்ணும் ம் நடவடிக்கை நடை பெறவுள்ளது.