பஞ்சாங்கத்தின் ஐந்திறன்களின் ஒன்றான நட்சத்திரம் கணிக்கப்படுவது ஒருவர் பிறந்த திகதி நேரத்தை வைத்தே ஆகும்.
அதாவது ஒருவர் பிறக்கும் நட்சத்திரமே அவரின் ஜென்ம நட்சத்திரமாக கொள்ளப்படும்.
பொதுவாக 27 நட்சத்திரங்களை பஞ்சாங்கம் வகுத்து வைத்துள்ளது அந்த 27 நட்சத்திரங்களும் 4 பாதங்களை கொண்டுள்ளது முழு இராசி சக்கரமும் 360 பாகை ஆகும் இது 27 நட்சத்திரங்களால் பிரிக்கப்பட்டுள்ளது ஒரு நட்சத்திர பிரிவு 13.3 பாகை அளவுள்ளது
இனி 27 நட்சத்திரங்களையும் காண்போம் அச்சுவினி, பரணி, கிருத்திகை ,ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை , புனர் பூசம் , பூசம் , ஆயிலியம் , மகம், பூரம், உத்தரம் , அத்தம், சித்திரை, சுவாதி , விசாகம், கெய்ட்டை, , மூலம் , பூராடம், உத்திராடம் ,திருவோணம், அவிட்டம் , சதயம் , பூரட்டாதி ,உத்திரட்டத்தி ,ரேவதி ஆகும். இவை ஒவ்வொன்றும் 1 அம்ம ,2 ஆம் , 3ஆம் ,4 ஆம் என்று பாதங்களை கொண்டுள்ளது .