உடலின் அனைத்துப் பகுதிகளையும் உறுதியாக வைத்திருக்கக்கூடியவை எலும்புகள். ஆகவே அவற்றின் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டியது பிரதானம் ஆகும்.
மனித உடலில் எலும்புப்புரை, ஊட்டச்சத்துக் குறைபாடு, மூட்டுத் தேய்மானம், ஆர்த்ரைட்டிஸ் போன்ற பிரச்னைகளாலும் எலும்புகள் பாதிப்படைகின்றன.
அந்த வகையில் எலும்புகளுக்கு ஆரோக்கியம் தருகின்ற உணவுகளை உட்கொள்ளுதல் அவசியமாகின்றது.
கல்சியம் நிறைந்திருக்கும் பால், தயிர், சீஸ், வெண்ணெய் போன்ற பால் உணவுகளையும், வைட்டமின் டி நிறைந்துள்ள முட்டை, மீன், மீன் எண்ணெய், காளான் போன்றவற்றையும் சாப்பிடலாம். சூரிய ஒளியிலிருந்தும் இவற்றினை பெற்றுக் கொள்ளலாம். கல்சியம் சத்தை முழுமையாகவும் முறையாகவும் உட்கிரகிக்க வைட்டமின் டி அவசியமாகின்றது.
மக்னீசியம் பெற்றுக்கொள்ள கீரை வகைகள், சூரியகாந்தி, பூசணி, எலுமிச்சை விதைகள், வால்நட், பாதாம், முந்திரி, பருப்பு வகைகள், சிறுதானியங்கள், கோதுமை, புழுங்கலரிசி, அவகாடோ போன்றவற்றினை சாப்பிடலாம்.