கனடாவின் மேற்குப் பகுதியில் காட்டுத் தீச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
மேற்கில் உள்ள அல்பேர்ட்டா (Alberta) மாநிலத்தில் ஒரே வாரத்தில் நூற்றுக்கும் அதிகமான பகுதிகளில் திடீரென காட்டுத் தீச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
அவற்றைச் சமாளிக்க அதிகாரிகள் திண்டாடி வருகின்றனர்.
வெப்பமான, வறண்ட வானிலை அடுத்த வாரமும் தொடரும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. சில பகுதிகளில் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை எட்டும் எனக் கூறப்பட்டுள்து.
கனடாவின் மேற்குப் பகுதியில் நிலைமை எந்நேரமும் மாறலாம். அதனால் அங்கிருந்து வெளியேறத் தயாராக இருக்கும்படி மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதுவரை சுமார் 30 ஆயிரம் பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.