பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்தது. தமிழக அமைச்சரவையின் பரிந்துரை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
7 பேர் விடுதலை குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எதுவும் அனுப்பவில்லை என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாக வந்த தகவலுக்கு ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது.
7 பேர் விடுதலை குறித்து அரசியல் சட்டப்படி முடிவெடுக்கப்படும் என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. ராஜீவ் கொலை வழக்கு விசாரணை மிகவும் சிக்கலானது ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் சட்ட பிரச்னை, நிர்வாக பிரச்சனையை ஆலோசிக்க வேண்டியுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான பக்கங்கள் அடங்கிய நீதிமன்ற தீர்ப்புகள் வரப்பெற்று உள்ளன என்று கூறப்பட்டுள்ளது. செப்டம்பர் 14-ம் திகதிதான் தமிழக அரசு அனைத்து ஆவணங்களையும் வழங்கியது.
எல்லா ஆவணங்களையும் படித்து பார்த்து முடிவெடுக்க வேண்டியுள்ளது என்று ஆளுநர் தெரிவித்துள்ளார். தேவையான ஆலோசனைகளை பெற்று முடிவெடுக்கப்படும் என்று ஆளுநர் விளக்கமளித்துள்ளார்.