சமீப நாட்களாக இணையத்தளங்களிலும் மீடியாக்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சிம்பு நயன் படம். வல்லவன் படத்தில் இணைந்து நடித்தபோது சிம்பு, நயன்தாரா இருவரும் காதலர்கனார்கள்.
ஆனால் அந்த காதல் இணையதளத்தில் வெளியான புகைப்படத்தால் முடிவுக்கு வந்தது. இருவரும் பிரிந்துவிட்டனர். பின்னர் பிரபுதேவாவுடன் நயன்தாரா நெருக்கமாக பழகினார். அவர்களுக்குள் மலர்ந்த காதலையடுத்து திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டனர். ஆனால் அதிலும் சிக்கல் ஏற்பட்டது. பிரபுதேவாவை விட்டும் பிரிந்தார் நயன்தாரா.
இதனிடையே சிம்புவுக்கும், ஹன்சிகா மீது காதல் வந்ததது. இந்த காதலாவது திருமண பந்தத்தில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுவும் முறிந்து போனது. இந்நிலையில் இயக்குனர் பாண்டிராஜ் தான் இயக்கும் இது நம்ம ஆளு படத்தில் முன்னாள் காதலர்களான சிம்பு மற்றும் நயன்தாரா இருவரையும் மீண்டும் ஜோடியாக்கினார். இவர்கள் இருவரும் சேர்ந்து படத்தில் நடிக்க எப்படி ஒப்புக் கொண்டனர் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருந்து வந்தது. இது பலருக்கு ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது. ஆனால் படத்தில் நடித்தபோதே இருவருக்கும் மீண்டும் அந்த பழைய நட்பு துளிர்விட்டதாக கூறப்பட்டது.
தற்போது அது நிரூபணமாகியுள்ளது. சமீபத்தில் நடந்த த்ரிஷாவின் பிறந்தநாள் பார்ட்டி கொண்டாட்டத்துக்கு நயன்தாரா, அமலாபால், சிம்பு, ரம்யா கிருஷ்ணன், டிவி தொகுப்பாளினி ரம்யா உட்பட பல நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர். ஹன்சிகாவுக்கும் அழைப்பு விடுத்திருந்தார் த்ரிஷா. கண்டிப்பாக வருவதாக த்ரிஷாவிடம் உறுதியளித்திருந்தார் ஹன்சிகா. ஆனால், கடைசி நேரத்தில் த்ரிஷாவின் பார்ட்டிக்கு செல்லும் திட்டத்தை கைவிட்டுவிட்டு கேக் மற்றும் பரிசு பொருட்களை மட்டும் வாங்கி அனுப்பி வைத்திருக்கிறார்.
ஆனால் த்ரிஷாவின் பிறந்தநாள் பார்ட்டிக்கு சிம்புவும் வருகிறார் என்பதை கேள்விப்பட்டே அங்கே செல்லும் திட்டத்தை கைவிட்டாராம் ஹன்சிகா. த்ரிஷாவின் பார்ட்டிக்கு ஹன்சிகா வரவில்லை என்றாலும், நயன்தாரா சரியான நேரத்துக்கு அங்கே ஆஜராகிவிட்டாராம். சற்று நேரத்தில் சிம்புவும் அங்கே வந்து சேர, த்ரிஷாவின் பிறந்தநாள் பார்ட்டி களைகட்ட ஆரம்பித்திருக்கிறது. சரியாக 12 மணிக்கு த்ரிஷா கேக் வெட்ட அதன் பிறகு ஒரே சியர்ஸ் சத்தம் தான். நல்ல ஆட்டம் போட்டுவிட்டு நடுராத்திரியில் தான் கிளம்பிப்போனார்களாம் நட்சத்திரங்கள்.
இந்த கேப்பில் நயன்தாராவும், சிம்புவும் அருகருகே உட்கார்ந்து நீண்ட நேரம் சிரித்து பேசிக்கொண்டு இருந்தார்களாம். மேலும் பார்ட்டியில் இருவரும் சேர்ந்து நிற்கும் புகைப்படத்தை பார்க்கும் போது மறுபடியும் இருவரும் காதலிக்கிறார்களா என்ற கேள்வியும் எழும்பியுள்ளது. அதுமட்டுமல்ல இது திருமணம் வரை போனாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை என பட உலகினர் கிசுகிசுக்கின்றனர்.