ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் மரணம்ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் மரணம்

‘ஆஸ்கார்’ விருது பெற்ற  63 வயதுடைய  ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் மர்மமான முறையில் தன் வீட்டில் நேற்று இறந்து கிடந்தார். ‘குட்வில் ஹண்டிங், மிசஸ் டவுட்பைர், குட்மார்னிங் வியட்னாம்’ போன்ற பல ஆங்கில படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ள ராபின் வில்லியம்ஸ், நேற்று கலிபோர்னியாவில் உள்ள தன் வீட்டு படுக்கையறையில் மூச்சுத் திணறி இறந்து கிடந்தார். அவர் தரையில் விழுந்து கிடந்ததைப் பார்த்த அவரது வீட்டார், அவசர மருத்துவ உதவி அதிகாரிகளை அழைத்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது, ராபின் வில்லியம்ஸ், ஏற்கனவே இறந்து விட்டதை உறுதிபடுத்தினர்.

இறந்த ராபின் வில்லியம்ஸ்சுக்கு, சூசன் ஸ்னெய்டர் என்ற பெயரில் மனைவி உள்ளார். இவரின் இறப்பு குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவரின் மறைவுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இரங்கல் தெரிவித்துள்ளார்.

Mrs. Doubtfire என்ற திரைப் படத்தில் பெண் வேடம் ஏற்று இவர் நடித்திருந்தமை எல்லோரும் அறிந்ததே.

robin-williams

ஆசிரியர்