September 21, 2023 1:09 pm

“ஐ” பட விழாவில் ஆர்னால்ட்டுடன் மேடையேறப் போகும் நடிகர்கள்! “ஐ” பட விழாவில் ஆர்னால்ட்டுடன் மேடையேறப் போகும் நடிகர்கள்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

“ஐ” பட இசை வெளியீடு பற்றித்தான் தற்போது தென்னிந்தியத் திரையுலகமே பேசிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென்று பல முக்கியப் பிரமுகர்களும் தயாரிப்பு நிறுவனத்தை அணுகி வருகிறார்களாம். நட்சத்திரங்கள் பலருக்கும் அந்த ஆசை இருக்கிறதாம்.

அதை வெளியில் சொல்லாமல் அவர்களது ஆட்கள் மூலம் தூது அனுப்பிக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதிலும் ஆர்னால்ட்டுடன் மேடையேறும் வாய்ப்பு கிடைக்காதா என்றும் சிலர் ஆசையில் இருப்பதாகவும் கேள்வி. அப்படி மேடையில் அமரும் பட்சத்தில் உலக அளவில் சரியான பப்ளிசிட்டி கிடைக்க வாய்ப்பு உள்ளதே அதற்குக் காரணம்.
ஜாக்கிசான் கலந்து கொண்ட தசாவதாரம் இசை விழாவில் கூட ஒரு சில நடிகர்களே மேடையேற்றப்பட்டனர். ஆர்னால்ட் பல வருடங்களாகவே ஹாலிவுட்டின் புகழ் பெற்ற நடிகராக விளங்கி வருவதால் ஐ படத்தின் மீதான சர்வதேச கவனம் கண்டிப்பாக அதிகமாகவே இருக்கும். தமிழ்த் திரையுலக நட்சத்திரங்களைப் பொறுத்தவரை ரஜினிகாந்த், கமல்ஹாசன் மேடையில் அமரப் போவது உறுதியாகிவிட்டதாம். மலையாளத் திரையுலகத்தில் இருந்து மம்முட்டி கண்டிப்பாக வருவார் என்கிறார்கள்.

அதே போல் தெலுங்குத் திரையுலகில் இருந்து மகேஷ் பாபு வருவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. கன்னடத் திரையுலகில் இருந்து யார் வருவார்கள் என்பது தெரியவில்லை. ஹிந்தித் திரையுலகத்தைச் சேர்ந்த வேறு யாரும் வருகிறார்களா என்பதும் முடிவாகத் தெரியவில்லையாம். அநேகமாக அனைத்து திரையுகிலிருந்தும் பிரபலமானவர்கள் மேடையேற்றப்படலாம் என்கிறார்கள்.
தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து விழா பற்றிய எந்தவிதமான நிகழ்ச்சி நிரலும் இன்னும் வெளியிடப்படவில்லை. ஒரு சில நாட்களில் அது பற்றிய முழு விவரம் வெளிவந்துவிடும் என்கிறார்கள்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்