படத்திற்காக 6 கிலோ எடை கூட்டிய சிவகார்த்திகேயன்படத்திற்காக 6 கிலோ எடை கூட்டிய சிவகார்த்திகேயன்

எதிர்நீச்சல்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘மான் கராத்தே’ என தொடர் வெற்றிப்படங்களை குவித்துவரும் சிவகார்த்திகேயன் தற்போது ‘எதிர்நீச்சல்’ இயக்குனர் துரை செந்தில்குமாருடன் இணைந்து ‘காக்கிச்சட்டை’ (டாணா) படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் உடையில் தோன்றி நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்காக ஜிம்முக்கு சென்று தனது உடல் எடையை 6 கிலோ வரை கூட்டியுள்ளார். இவருடைய தோற்றம் இந்த படத்தில் வித்தியாசமாக இருக்கும் என படக்குழுவினர் கூறுகின்றனர். போலீஸ் உடையில் நடித்தது தனக்கு அப்பாவை நினைவுப்படுத்தியது என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்னும் ஒரேயொரு பாடல் மட்டும் படமாக்கப்படவுள்ளது. விரைவில் படத்தை முடித்துவிட்டு ஆடியோவை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த வருட இறுதியில் படம் வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர்