September 21, 2023 12:05 pm

சமூக மாற்றத்துக்கான படைப்பு விருது மெட்ராஸ் படத்தின் இயக்குனர் ரஞ்சித்துக்கு சமூக மாற்றத்துக்கான படைப்பு விருது மெட்ராஸ் படத்தின் இயக்குனர் ரஞ்சித்துக்கு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கார்த்தி, கேத்ரினா தெரசா நடித்து சமீபத்தில் வெளியான படம் மெட்ராஸ். அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கி இருந்தார். ஸ்டூடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார். வட சென்னை மக்களின் வாழ்க்கையை யதார்த்தமாக பதிவு செய்த படம். நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்துக்கு மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் எவிடென்ஸ் என்ற அமைப்பு சமூக மாற்றத்துக்கான படைப்பு என்ற விருதை அறிவித்துள்ளது.

எவிடென்ஸ் அமைப்பு பல்வேறு சமூக பிரச்னைகளை கையிலெடுத்து போராடி வருகிறது. அதோடு ஆண்டுதோறும் சமூக மாற்றத்துக்காக போராடும் படைப்பாளிகளுக்கு விருது வழங்கியும் கவுரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மெட்ராஸ் படத்தின் இயக்குனர் ரஞ்சித்துக்கு விருது வழங்க முடிவு செய்திருக்கிறது.

“மெட்ராஸ் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை சித்தரிக்கிறது. அப்பாவி இளைஞர்களை அரசியல்வாதிகள் எப்படி தங்களது சுயநலத்துக்காக பயன்படுத்துகிறார்கள் என்பதையும், சென்னையின் அடித்தட்டு மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதையும் யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறது. இந்த படம் எங்கள் அமைப்பின் பிரச்சார கருவியாக இருப்பதால் இந்த ஆண்டு சமூக மாற்றத்துக்கான படைப்பு விருதை மெட்ராஸ் படத்தின் இயக்குனர் ரஞ்சித்துக்கு வழங்குகிறோம். வருகிற 25ந் தேதி மதுரையில் நடக்கும் விழாவில் விருதுடன் ரூ.25 ஆயிரம் ரொக்க பரிசும் வழங்கப்படும்” என்று எவிடென்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. – See more at: http://cinema.dinamalar.com/tamil-news/22674/cinema/Kollywood/Award-for-Madras-movie.htm#sthash.ZGH7q5G9.dpuf

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்