50 காஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை அரசு, தன்னார்வலர்கள் செய்து வரும் நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் உதவி செய்வதாக அறிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் அருகே கரையைக் கடந்த காஜா புயல் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவித்த நிலையில் தன்னார்வலர்கள், பிரபலங்கள் அவர்களோடு திரைத்துறையினரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.
அதன்படி நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம், சிவகுமார் 50 லட்சம், விஜய் 45 லட்சம் என பலரும் நிவாரணங்களை நிதியாகவும், பொருளாகவும் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், டிசம்பர் மாதம் கனடாவில் நடைபெறவுள்ள எனது இசை நிகழ்ச்சியில் கிடைக்கக் கூடிய பணத்தில் குறிப்பிட்ட தொகையை காஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக வழங்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.