இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட இருக்கும் இந்திய திரைப்படங்களின் பட்டியலில் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய ‘ஆர்.ஆர்.ஆர்’, பார்த்திபன் ‘இரவின் நிழல்’ உட்பட பல படங்கள் இருந்த நிலையில் ‘ஆர்.ஆர்.ஆர்’ மற்றும் ‘இரவின் நிழல்’ ஆகிய 2 திரைப்படங்களும் தகுதி பெறவில்லை என்ற தகவல் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பல திரைப்படங்கள் பட்டியலில் இடம்பெற்ற நிலையில் தற்போது குஜராத்தி மொழி திரைப்படமான ‘ஷெல்லோ ஷோ’ என்ற படம் ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.