2018 ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது தமிழிலக்கிய ஆய்வாளரும், நாவலாசிரியருமான பேராசிரியர் ராஜ் கௌதமன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விருது வழங்கப்பட உள்ளது. தமிழின் மூத்த படைப்பாளுமைகளைக் கௌரவிக்கும் பொருட்டு விஷ்ணுபுரம் விருது கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
கோவையை மையமாகக்கொண்டு செயற்படும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த விருது, பாராட்டுக் கேடயமும், ரூ.1,00,000 விருது தொகையும் உள்ளடங்கியுள்ளது.
விருது விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி, மலையக எழுத்தாளரும் இயக்குனருமான மதுபால், தமிழ் எழுத்தாளர்களான ஜெயமோகன், தேவிபாரதி, ஸ்டாலின் ராஜாங்கம், சுனீல் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
விழாவில் கே.பி.வினோத், இலக்கிய பேராசிரியர் ராஜ் கௌதமன் குறித்த ஆவணப்படம் “பாட்டும் தொகையும்” திரையிடப்பட உள்ளது. நிகழ்வில் ராஜ் கௌதமனின் படைப்புலகம் குறித்து கலைவிமர்சகர்கள் எழுதிய நூலும் விழா மேடையில் வெளியிடப்பட உள்ளது.