கோவை., கதைகளின் ரசிகர்கள் குழந்தைகள். ஒரு குழந்தைக்கு வீடு தான் முதல் பள்ளிக் கூடம். காலங்காலமாக நம் வீடுகளில் ராமாயணம், மகாபாரதம், நீதி போதைனைக் கதைகளை குழந்தைகளுக்கு கூறியதன் மூலமாக நன்னெறிகளையும் சொல்லிக் கொடுத்தார்கள் கூட்டுக் குடும்பங்களின் வரமான தாத்தாவும், பாட்டியும்.
இன்று கூட்டுக் குடும்ப அமைப்புகள் வழக்கொழிந்து தனிக் குடும்பங்கள் பெருகிவிட்டன. தந்தை, தாய்க்கும் பணிச்சூழல், நவீன வாழ்க்கை கொடுக்கக்கூடிய அழுத்தத்தால் வாழ்க்கை முறை மாறிவிட்டது. குழந்தைகளிடம் போதுமான அளவு நேரம் செலவழித்து கதைகள் சொல்லவும் முடிவதில்லை. கதைகள் சொல்லும் பழக்கமும் அரிதாகிவிட்டது.
கதைகள் கற்பனை வளத்தினை தூண்டுபவை. குழந்தைகளுக்கு கதை சொல்லுதல் வழியாக கற்பனைத்திறன், கவனிப்புத் திறன் போன்ற திறன்கள் மேம்படும். நேர்மை, உண்மை பேசுதல், உதவும் மனப்பான்மை, விடாமுயற்சி, தோல்வி கண்டு துவளாமை போன்ற வாழ்க்கைத் திறன்களும் வளரும். மேலும் பாதுகாப்புணர்வும் குழந்தைக்கு இருக்கும்.
ஆகவே குழந்தைகள் மனதில் நல்லதை விதைக்க கதை சொல்லும் தொடர் நிகழ்வினை முன்னெடுத்து ஜூலை மாதம் முதல் முன்னெடுத்து வருகிறது ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம். ‘கண்மணியே கதை கேளு’ என்னும் தொடர் நிகழ்வின் மூன்றாவது நிகழ்ச்சி வரும் ஞாயிறு செப்டம்பர் 1, காலை 11 மணிக்கு, ஆர்.எஸ்.புரம் சிந்து சதன் ஹாலில் நடைபெற இருக்கிறது.
குழந்தைகள் மத்தியில் மிகப்பிரபலமான கதை சொல்லி அமுதா கார்த்திக் குழந்தைகளுக்கு கதைகள் சொல்ல இருக்கிறார். மேலும் நாம் மறந்துபோன பாரம்பரிய விளையாட்டுக்களும் விளையாட சொல்லிக் கொடுக்கிறார். 5 முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம்.