நான் பேசத்தெரிந்த மனிதன்
நான் பேசுவேன்
என் கனவு பற்றி பேசுவேன்
என் காதல் பற்றி பேசுவேன்
நான் எழுதத்தெரிந்த மனிதன்
என் வாழ்வு பற்றி எழுதுவேன்
என்னோடு வாழ்ந்த மனிதர் பற்றி எழுதுவேன்
எங்கு நான் வாழ்ந்தாலும்
என் வேர் பற்றி எழுதுவேன்
என் இனம் என் மண் எம் விடுதலை என் அடையாளம்
எல்லாம் பற்றியும் எழுதுவேன் பேசுவேன்
வஞ்சனை செய்வோர் பற்றியும்
வாய்ச்சொல்லில் வீரர்கள் பற்றியும்
எஞ்சி இருக்கும் காலம் வரை
என் தமிழ் தந்த திமிரோடு
எழுதுவேன் பேசுவேன்
நான் எழுதப் பேசத் தெரிந்த மனிதன்
என் மூச்சும் என் பேச்சும் நிற்கும் வரைக்கும்
நான் எழுதுவேன் நான் பேசுவேன்.
-பா. உதயன்