ஒரு கோடைக்கால பழம். இப்பழம் மிகவும் சுவையானது மட்டுமின்றி, உடலை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கத் தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன.
இரவு நேரத்தில் லேசான உணவை சாப்பிட வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். மாம்பழம் செரிமானமாவதற்கு நிறைய நேரம் எடுக்கும். மாம்பழத்தை இரவு நேரத்தில் சாப்பிட்டால், அது வயிற்று உப்புசத்தை உண்டாக்கும். சில சமயங்களில் வயிற்றுப் போக்கு அல்லது வாந்தி போன்றவற்றையும் ஏற்படுத்தும்.
மாம்பழத்தில் சர்க்கரை அதிக அளவில் உள்ளது. சாதாரணமாக சர்க்கரை நோயாளிகள் மாம்பழத்தை ஒரு துண்டிற்கு மேல் சாப்பிட கூடாது. அதுவும் இரவு நேரத்தில் சாப்பிட்டால், அது இரத்த சர்க்கரை அளவை மோசமான அளவில் அதிகரித்துவிடும்.
இரவு நேரத்தில் நேரத்தில் தினமும் உட்கொண்டு வந்தால், அது உடல் பருமனை அதிகரிக்கும்.
இரவு வேளையில் சாப்பிட்டால் உடல் சூடு அதிகரித்து, அதன் விளைவாக முகப்பரு அல்லது பிம்பிள் போன்ற சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
ஒரு நாளைக்கு ஒரு துண்டு மாம்பழத்திற்கு மேல் சாப்பிடக்கூடாது. சுவையானது என்று அளவுக்கு அதிகமாக சாப்பிடாமல் மிதமான அளவில் மாம்பழத்தை சாப்பிட்டால், அதன் முழு நன்மைகளையும் பெறலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மாம்பழத்தை சாப்பிடுவதற்கான சிறந்த நேரம் மதிய வேளை தான்.
நன்றி boldsky