புதிய உறுப்பினர்களாக 5 நாடுகள் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில்புதிய உறுப்பினர்களாக 5 நாடுகள் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில்

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலுக்கான புதிய நிரந்தரமற்ற உறுப்பினர்களாக அங்கோலா, மலேஷியா, நியூசிலாந்து, வெனிசுலா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே இருந்த உறுப்பு நாடுகள் அர்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, லக்சம்பர்க், தென் கொரியா மற்றும் ருவாண்டா ஆகிய 5 நாடுகளின் பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து புதிய உறுப்பு நாடுகளாக  அங்கோலா, மலேஷியா, நியூசிலாந்து, வெனிசுலா மற்றும் ஸ்பெயின் தேர்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய உறுப்பு நாடுகளின் பதவி வரும் 2015ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து தொடங்கும். நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளுக்கான தேர்தலில், ஐ.நா. பொது சபையில் மொத்தம் உள்ள 193 உறுப்பினர்களில் 129 வாக்குகள் அல்லது மூன்றில் 2 பங்கு வாக்குகளைப் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்