எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் பயணிகள் பஸ்களில் ஒலிபரப்பக்கூடிய பாடல்களின் பட்டியலை பஸ் உரிமையாளர்களுக்கு வழங்க அரசாங்கம் முடிவுசெய்துள்ளது.

பஸ் வண்டிகளில் உரத்த இசையின் காரணமாக பயணிகளுக்கு உண்டாகும் அசெளகரியங்களை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே போக்குவரத்து அமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

அத்துடன் இது தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பொது மக்களிடமிருந்து சுமார் 15,000 முறைப்பாடுகளை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

புதிய விதிமுறையின்படி, தனியார் மற்றும் அரசாங்கத்துக்கு சொந்தமான பஸ்களில் பாடல் இருவட்டு, அல்லது அவர்கள் விரும்பும் பாடல்களை இயக்க தடை விதிக்கப்படவுள்ளதுடன், பஸ்களில் ரோடியோக்களை இசைக்கவும் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.