செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் மியான்மரில் மேலும் 6 மாதம் அவசரநிலை நீட்டிப்பு

மியான்மரில் மேலும் 6 மாதம் அவசரநிலை நீட்டிப்பு

0 minutes read

மியான்மரில் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் 83% வாக்குகளுடன் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது.

ஆனால், 2021ம் ஆண்டு பெப்ரவரி மாதம் ராணுவம் ஆட்சியை கைப்பற்றி நாட்டில் ஒரு வருடம் அவசரநிலையை அறிவித்தது. அதன் பிறகு, மீண்டும் ஒருமுறை அவசரநிலையை நீட்டித்தது.

இந்நிலையில், ராணுவத்தின் கீழ் செயல்படும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நேபிடாவ் நகரில் நடந்தது. இதில் தேர்தல் நடத்துவதற்கான தயாரிப்புகளுக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால், அவசரநிலையை மீண்டும் நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, மேலும் 6 மாத காலத்துக்கு அவசரநிலை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More