சாபங்கள் இப்போது மட்டுமல்ல பழமையான இதிகாச காலங்களில் இருந்தே பேசப்பட்டு வரும் ஒன்று ஆகும். அத்தகைய சாபத்தின் வலிமை கொடுக்கும் நபரை பொறுத்தே பலிக்கும் தன்மை கொண்டதாக காணப்படுகிறது.
எப்படி கொடுக்கும் சாபம் பலிக்கும் தெரியுமா உடல் மனம் அனைத்தும் ஒரு நேர்கோட்டில் இருந்து கொடுக்கும் சாபம் பலிக்கும்.
பஞ்சபூத சக்திகளை ஒன்று திரட்டி கொடுக்கும் சாபங்கள் பலித் தே தீரும் என்பார்கள் அதாவது சிலர் வயிறெரிய மண்ணை வீசி வாரி தூத்தி செய்யும் சாபத்துக்கு வலிமை அதிகம்.அதேபோல முனிவர்களை பார்த்திருப்போம் தண்ணீரை எறிந்து சபிப்பதுண்டு இவ்வாறு பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரை சாட்சியாக கொண்டு வழங்கப்படும் சாபங்களுக்கு பலிக்கும் தன்மை அதிகம்.
இது தவிர்த்து ஒருவர் கொடுக்கும் சாபம் பலித்து விடுகின்றது என்றால் அவர் மனத்தூய்மையுடைய கர்மாவை கொண்டவராக இருக்கின்றார்கள்.என்பதே பொருள் எனவே ஒருவருக்கு நாம் பாவம் செய்யும் போது ஞயமே இல்லாமல் செய்வோமேயானால் பெரும் பாவம் வந்து சேரும்.