கடந்த சில நாட்களாக வட இந்திய மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. தலைநகர் டெல்லியில் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படுகிறது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடும் பனியில் இருந்து காத்துக்கொள்ள டெல்லி மக்கள் சாலையில் தீ மூட்டி குளிர்காய்கின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் நிலவும் குளிர் காலநிலை காரணமாக, பாலர் பள்ளிகள் முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜனவரி 12ஆம் திகதி வரை விடுமுறை அறிவித்து கல்வி அமைச்சர் அதிஷி உத்தரவிட்டுள்ளார்.