கேரளாவில் கைதி ஒருவருடன், போலீஸார் டிக் டாக் வீடியோவை வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டிக் டாக் வீடியோவால் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, குடும்பத்துடனும் இணைந்தும்கூட, வீடியோவை வெளியிட்டு வருகின்றனர்.
வீடியோக்களில் ஆபாசக்காட்சிகள் அதிகம் இடம்பெறுவதாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது.
அந்த வகையில் கேரளாவைச் சேர்ந்த காவலர்கள் சிலர், பணி நேரத்தில் கைதி ஒருவருடன் இணைந்து டிக் டாக் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோவில், `3 காவல் அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பின்புறம், காவல்துறை வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
காவலர்கள் அழைத்து வந்த கைதி ஒருவர் ஆடுகிறார்.
சில நொடிகளுக்குப் பின் அவர்களும் காவலர்களுடன் இணைந்து நடனம் ஆடுகின்றனர். மலையாள பாட்டு ஒன்று ஒலிக்க, மூன்று காவலர்கள் ஒரு கைதி ஜாலியாக ஆடும் வீடியோ’ வெளியாகியுள்ளது.
நன்றி-tiktok