1
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினிடம் எந்த பதவியையும் வலியுறுத்தி அக்கட்சியில் இணைந்துகொள்ளவில்லை என தி.மு.கவின் கொள்கை பரப்பு செயலாளரான தங்கத் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினிடம் எந்த பதவியையும் வலியுறுத்தி அக்கட்சியில் இணைந்துகொள்ளவில்லை என தி.மு.கவின் கொள்கை பரப்பு செயலாளரான தங்கத் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், செயற்பாடுள்ளவர்களுக்கு கட்சியில் முன்னுரிமை வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தமிழ் மொழியும், தமிழ் இனமும் பாதுகாக்கப்பட வேண்டும், இந்த நாட்டின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே என்னுடைய கொள்கையாகும் என்றும் அவர் கூறினார்.
இவை எல்லாவற்றையும் செய்யும் ஆற்றல் தி.மு.கவிற்கு உண்டு எனவும் அதன் காரணமாகவே தான் தி.மு.கவில் இணைந்துகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை அ.தி.மு.கவில் இருந்து விலகிய தங்கத் தமிழ்ச்செல்வனிற்கு தி.மு.கவில் பதவி வழங்கப்பட்டுள்ளமையை பல அரசியல் தலைவர்கள் விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.