0
அண்மையில்கூட, ரஜினி மதுரையில் மாநாடு ஒன்று நடத்தி, கட்சி ஆரம்பிக்க உள்ளதாக தகவல் பரவியது.
`நான் அரசியலுக்கு வருவது உறுதி’ என்று நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கூறியிருந்தார். ரஜினியின் இந்த வாசகம் அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தையும், நம்பிக்கையையும் விதைத்தது. இதையடுத்து, `காலா’, `பேட்ட’ படங்களில் நடித்தாலும், இடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாகவும், 7 பேர் விடுதலை உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் கருத்து தெரிவித்தார். தொடர்ந்து மக்களவைத் தேர்தலில் ரஜினி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ, `சட்டமன்ற தேர்தல்தான் இலக்கு’ என்று உறுதிபட தெரிவித்தார். காஷ்மீர் பிரச்னை தொடர்பாக, “காஷ்மீர் மிகப்பெரிய விஷயம்; அது நம் நாட்டின் பாதுகாப்போடு தொடர்புடைய விஷயம். அந்த காஷ்மீர் தீவிரவாதிகளுக்கும் ஒரு தாய் வீடாக இருந்துகொண்டிருக்கிறது.
அவர்கள் எல்லாரும் இந்தியாவில் ஊடுருவ அது, ஒரு நுழைவு வாயிலாக இருக்கிறது. அதை நம் கைப்பிடியில் கொண்டுவர வேண்டும் என்பதற்காக ராஜதந்திரத்துடன், முதலில் 144 தடை உத்தரவு போட்டு, பிரச்னை செய்பவர்களை வீட்டுக்காவலில் வைத்து, என்ன செய்யப்போகிறார்கள் என்று சொல்லாமல், பெரும்பான்மை இல்லாத ராஜ்யசபாவில் சட்டத்தைக் கொண்டுவந்து அமல்படுத்தினர். எதை அரசியல் ஆக்க வேண்டும் என புரிந்துகொள்ள வேண்டும். இது நாட்டின் பாதுகாப்பு பிரச்னை” என்றார்.
`ஒரு மொழி இருப்பது நல்லதுதான். தமிழகத்தில் மொழியை திணிக்க முடியாது’ எனக் கூறியிருந்தார். இதனிடையே `ஆனந்த விகடன்’ இதழுக்குப் பேட்டியளித்த சிரஞ்சீவி, `ரஜினி, கமல் போன்றோர் அரசியலுக்கு வரவேண்டாம் என்பது எனது வேண்டுகோள்’ எனக் கூறியிருந்தார். அண்மையில்கூட, ரஜினி மதுரையில் மாநாடு ஒன்று நடத்தி, கட்சி ஆரம்பிக்க உள்ளதாக தகவல் பரவியது. இந்த நிலையில், `ரஜினி ஆறு மாதத்தில் கட்சி ஆரம்பிப்பார்’ என கராத்தே தியாகராஜன் கூறியிருக்கிறார்.