பிரித்தானியாவில் இருந்து நவம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் இந்தியாவிற்கு வருகை தந்த அனைத்துப் பயணிகளையும் கண்காணிக்கும் வகையிலான நிபந்தனைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வு கண்டுப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிக்காட்டுதலில், பிரித்தானியாவில் இருந்து கடந்த நவம்பா் 25-ஆம் திகதி முதல் திரும்பிய பயணிகள் அனைவரும் கடந்த 14 நாள்களின் பயண விவரங்களைச் சமா்ப்பிக்க வேண்டும் என்பதுடன், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதற்கான சுய ஒப்புதல் படிவத்தையும் சமா்ப்பிக்க வேண்டும்.
பயணிகளை மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகள் செல்லிடப்பேசி மூலம் தொடா்பு கொண்டு பாதுகாப்பு நடைமுைறைகள் குறித்து அறிவுறுத்துவதோடு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக விரைவுப் பரிசோதனை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்க வேண்டும்.
இந்த விரைவுப் பரிசோதனையில் தொற்று இல்லை என்ற முடிவு வரும் பயணிகள், வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க அறிவுறுத்தப்படுவதோடு, அதைக் கண்காணிக்கவும் வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.