கட்சித் தொடங்கி அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்வதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது ருவிட்டர் பக்கத்தில் ரஜினி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “என் உயிரே போனாலும் பரவாயில்லை. நான் கொடுத்த வாக்கைத் தவற மாட்டேன். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்போது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலுபேர் நாலுவிதமாக என்னைப் பற்றிப் பேசுவார்கள். என்பதற்காக என்னை நம்பிகூட வருபவர்களை பலிகடா ஆக்க நான் விரும்பவில்லை.
ஆகையால், நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகவும் வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன். இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும்தான் தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.