புத்தாண்டில் இந்தியாவுடனான நட்புறவு மேலும் வலுப்பெறும் என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த புடின், புதிய ஆண்டில் இரு நாடுகளும் பரஸ்பர கூட்டுறவை வலுப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து ரஷ்ய அரசு வெளியிட்ட அறிக்கையில் கொரோனா பேரிடர் காலத்திலும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு, பிரிக்ஸ் உச்சி மாநாடு போன்றவை வெற்றிகரமாக நடைபெற்றதாகவும், இரு நாடுகளின் நட்பு வலுவுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.