தமிழ்நாட்டில் சென்னை உட்பட 5 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஒத்திகை நாடு முழுவதும் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை, நீலகிரி, திருநெல்வேலி, கோவை, திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் 17 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற உள்ளது.
சென்னையில் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை உட்பட 3 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது.
நீலகிரியில் உதகை மருத்துவ கல்லூரி, குன்னூர் அரசு மருத்துவமனை உட்பட 3 இடங்களில் ஒத்திகை நடைபெற உள்ளது.
நெல்லையில் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 3 இடங்களிலும், பூந்தமல்லியில், அரசு மருத்துவமனை, நேமம் பொது சுகாதார மையம் ஆகிய இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.