பிரியா சிறிய வயதிலேயே சிறந்த கால்பந்து வீராங்கனையாக திகழ்ந்தவர்.இன்று மரணித்து பல மனங்களில் ரணங்களை கொடுத்து விட்டார்.
இந்தியாவின் வியாசர்பாடியில் வசித்து வந்த மாணவி கால்பந்து வீராங்கனையான பிரியா மாவட்ட மாநில அளவில் கால்பந்து விளையாட்டிலே சாதித்து வந்துள்ளார். இந்த மாணவி இன்று காலை ராஜிவ் காந்தியின் அரசு வைத்திய சாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.
இவரின் இந்த மரணத்துக்கு முன்னர் இவருக்கு இருந்த தசை பிடிப்பு காரணமாக பெரியார் நகர் வைத்திய சாலையில் அனுமத்திக்கப்பட்டு சத்திரசிகிச்சை ஒன்று செய்யப்பட்டுள்ளது. அந்த சத்திரசிகிச்சையில் போடப்பட்ட அழுத்தமான கட்டு காரணமாக அவரது கால் அழுகியுள்ளது.
இது ராஜு காந்தி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே தெரிய வந்துள்ளது. அந்த கட்டு நாளங்களை பிளாக் செய்து கால் அழுகிய நிலையில் கடந்த 10 ஆம் திகதி கால் எடுக்க பட்டு பின்னர் அவரின் உடலெங்கும் அந்த கிருமிகள் பரவியதால் இன்று அதிகாலை அந்த மாணவி மரணித்தார்.
இதற்கான காரணம் வைத்தியரின் கவனகுறைவே என்று அறிய வருகிறது. மேலும் இந்த மாணவியின் மரணத்தால் அவர்களின் தாய் சகோதரர் ஊடாகங்களில் கதறி அழும் காட்சி அனைவரையும் வேதனை பட வைத்துள்ளது.
பிரியாவுக்கு பல அரசியல் தலைவர்கள் இரங்கலை கூறியுள்ளதுடன் திமுகா தலைவர் இறங்களுடன் 10 லட்ஷம் இழப்பீடு தொகையையும் அறிவித்துள்ளார்.மா. சுப்பிரமணியம் அவரின் சகோதரர்களுக்கு அரச வேலை தரப்படும் என அறிவித்துள்ளார்.