மாற உள்ள புதிய செயலாளர் பயங்கரவாதிகளின் சதித்திட்டம், வெளிநாடுகளில் உளவு பார்க்கும் திட்டம், உள்நாட்டில் உளவாளிகளை கண்டறிதல் போன்ற விஷயங்களை ரகசியமாக சேகரித்து இந்திய மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கும் அமைப்பு ரா (RAW).
இந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளிலும் ரா ஏஜெண்டுகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பதவியாக செயலாளர் பதவி கருதப்படுகிறது. இதில் சமந்த் குர்னார் கோயல் தற்போது பதவி வகித்து வருகிறார். இவர் 1984ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்சை சேர்ந்தவர்.
90களில் பஞ்சாபில் பயங்கரவாதம் தலை தூக்கிய போது, அதை திறமையாக எதிர்கொண்டு முடிவுக்கு கொண்டு வர உதவியவர். ரா தலைவராக பாகிஸ்தானில் நடந்த பாலகோட் விமானப்படை தாக்குதல், ஜம்மு காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்த போது முன்னெடுக்கப்பட்ட அமைதி நடவடிக்கை, காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிரான செயல்பாடுகள் எனப் பல்வேறு வெற்றிகரமான அசைன்மென்ட்களை முடித்தவர்.
துபாய், இங்கிலாந்து போன்ற நாடுகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். இவரது பதவிக் காலம் வரும் ஜூன் 30ஆம் தேதி உடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் புதிய செயலாளராக ரவி சின்ஹாவை நியமித்து மத்திய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இவர் 1988ஆம் ஆண்டு சட்டீஸ்கர் கேடரை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.